சினிமாக்காரர்களைபுராக்கணிக்கலமே
சினிமா நடிக,நடிகையர் கூட்டம் போட்டு பேசும்போது ‘எங்களுக்கு குடும்பம்,குழந்தைகள்,பெரிய பிள்ளைகள்,பேரன்,பேத்திகள் இருக்கின்றனர்;அவர்கள் எல்லாம் என்ன நினைப்பர் எனக் கேட்டனர்.
படங்களில்,ஆபாசமாக இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் பேசுகின்றனர். தன் உடம்பின் 50 சதவீதம் பாகம் வெளியே தெரியும்படி,ஃபோட்டோ எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்புகின்றனர். ஒரு நடிகை, மரத்தின் மீது ஏறி நிற்கிறார்; தொடைக்கு மேலே உடை!
‘டிவி’ யில் வரும் நடிகைகளுக்கு, முதுக்குப் பிரதேசத்தில், ‘பிட்’ துணி கிடையாது. மூன்று, நான்கு நூல் மட்டும் கட்டப்பட்ட்டிருக்கிறது. இதைப் பார்த்து அவர் குழந்தை, ‘ஆஹா... அருமை! அம்மா நீங்கள் தான் கண்ணகியின் மறுபிறவி’ என கூறுகிறதா?
இன்னொரு நடிகை யாரைப் பார்த்தாலும், ‘மச்சான்’ என அழைக்கிறார். அப்ப அவ்வளவு பேரும், ‘புருஷன்’ முறையா? இதையெல்லாம் , அவர்கள் குடும்பம் ஏற்றுக்கொள்கிறதா?
இவர்கள் சேவை வேண்டாம் என ஒரு வருடம் சினிமாவை நிறுத்தி வைத்தால், பொதுமக்களுக்கும், சமுதாயத்திற்கும் நஷ்டம் எதுவுமே வராது. சினிமா நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை, பத்திரிகைகள் அறவே நிறுத்த வேண்டும் சினிமா ஒரு பொழுது போக்கு விஷயம் மக்கள் முக்கியத்துவம் தரவேண்டாம் வாழ்க்கை வழிகாட்டி உங்கள் அருகில் உள்ளது. முயற்சி வெற்றியைத் தரும் சினிமாவில் நேரத்தை வீணாக்காதிர் ஒவ்வொரு நிமிடம் போனால் திரும்பாது கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறவிடாதிர்